Mama and Mami
Mama and Mami
Traditional Dress Maker
0

9 Yards Madisar saree

05 Apr 2022 06:14 AM By info

மடிசார் நிறங்கள்

பெண்களுக்கு இருக்கும் மிக பெரிய பிரச்சனைகளில் ஒன்று. மிக முக்கியமானது புடவை கடையில் கொட்டி கிடக்கும் நூற்றுக்கணக்கான புடவைகளில் தங்களுக்கு பிடித்த புடவையை தேர்ந்தெடுப்பது. அதிலும் உங்களுக்கு பொருத்தமான மடிசார் புடவையின் நிறத்தை தேர்ந்தெடுப்பது மிகவும் கஷ்டமான ஒன்று தான்.


நிறம் வெறும் நிறம் அல்ல. அதில் அதையும் தாண்டி பல உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் உள்ளடக்கியுள்ளது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் அந்த நிறம் உங்கள் வெளிப்புற அழகை காட்டுவதோடு உங்கள் உள் அழகையும் சேர்த்து காண்பித்தால் அது கூடுதல் உற்சாகத்தை தரும் அல்லவா? கீழுள்ள தலைப்புகளில் உங்களுக்கு பொருந்தும் ஒன்றை தேர்வு செய்யுங்கள். உங்கள் உள் அழகை பிரதிப்பொலிக்கும் நிறத்தை கண்டுபிடியுங்கள்.


நீங்கள் ஒரு பொறுப்பான நபரா ? 

உங்கள் பொறுப்புக்கும் விசுவாசத்திற்கும் உங்களுக்கு ஏற்ற நிறம் நீலம். அகண்ட வானத்தை போல கடலின் பரப்பை போல நிலைகொண்டு நிற்கும் தங்களின் உள் அழகை அழகாக வெளியே பறைசாற்றும். இந்த நீல நிற மடிசார் புடவையில் உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு நீங்கள் மயிலை போல அழகாக தெரிவீர்கள். 


நீங்கள் சமநிலையான நபரா ? நேர்மறை எண்ணங்கள் அதிகம் கொண்டவரா ?

உங்கள் பாசிடிவ் எண்ணங்களுக்கும் சமநிலை முடிவிற்கும் ஏற்றது பச்சை நிறம். உங்கள் நிலைப்பாட்டை மிகவும் அழுத்தமாக பிரதிப்பொலிக்கும் அழகு கிளியின் பச்சை நிறம். 


நீங்கள் இயற்கையை நேசிக்கிறவாரா ? 

பழுப்பு நிறம் உங்கள் செயற்கை கலக்காத எண்ணங்களுக்கு ஏற்றது. வான் நோக்கி நிற்கும் மலைகளின் நிறம் உங்கள் மனதை மிகவும் நேர்த்தியாக வெளிக்காட்டும். 

 

நீங்கள் ஆடம்பரத்தை அதிகம் பயன்படுத்துபவரா ? தன்னை தானே அதிகம் நேசிப்பவரா ? 

உங்கள் செல்ப் லவ் எண்ணங்களுக்கும் ஆர்வத்திர்க்கும் ஏற்றது ஊதா நிறம். உங்கள் தன்னிலையை மிகவும் அழகாக பிரதிப்பொலிக்கும் நிறம் ஊதா மலரின் அற்புத நிறம்.

 

நீங்கள் தைரியமானவரா ? 

அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய உங்களுக்கு மிகவும் ஏற்ற நிறம் சிவப்பு. கிளி மூக்கின் நிறம் உங்கள் அதீத ஆற்றலையும் உற்சாகத்தையும் வெளிக்காட்டும்.

இந்த சிவப்பு நிற மடிசார் புடவையில் உங்களை சுற்றி உள்ளவர்களின் கவனத்தை மொத்தமாக ஈர்ப்பீர்கள். 


நீங்கள் தனிதன்மை வாய்ந்தவரா ? வேடிக்கையான நபரா ?

ஆரஞ்சு எனப்படும் நாரங்கம் நிறம் உங்கள் தனித்தன்மையை அழகாக வெளிக்காட்டும். உங்கள் வேடிக்கைதனத்தையும் அழகாக காட்டும். இந்த நிற மடிசார் புடவை உங்களை சுற்றி இருக்கும் அனைவரிடமும் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும். 

 

நீங்கள் சிந்தித்து விரைவில் முடிவெடுப்பீரா ? 

எல்லா விஷயங்களிலும் தெளிவாக சிந்தித்து முடிவெடுக்கும் தங்கள் மனதிற்கு ஏற்ற மஞ்சள் நிறம். உங்களை சுற்றியுள்ள தீமைகளை களைந்து நன்மைகளை சூழ வைக்கும் உங்களுக்கும் உங்கள் உள்ளத்திற்கும் ஏற்றது. இந்த மஞ்சள் நிற மடிசார் புடவையில் உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு நீங்கள் மங்களகரமாய் தெரிவீர்கள். 


நீங்கள் ஒரு குழந்தையைப் போன்றவரா ?

இளஞ்சிவப்பு எனப்படும் பிங்க் உங்கள் குழந்தைத்தனத்தை அழகாக வெளிப்படுத்து வெளிப்படுத்தும். ஒரு அழகான இளஞ்சிவப்பு பூவை போல உங்கள் குறும்பு தனத்தையும் அனைவரும் ரசிக்கும் படி அமையும் இந்த இளஜ்சிவப்பு நிற மடிசார். 

 

 

 

 

Madisar Colours

info

Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.